இளம் வயதில் மாடர்ன் உடையில் நடிகை குஷ்பூ… எவ்வளவு அழகா இருக்காங்க?….இந்த புகைப்படத்தை இதுவரை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க…

90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ் மட்டுமே ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார் நடிகை குஷ்பூ. தமிழில் இவர் ‘தர்மத்தின் தலைவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை குஷ்பூ.

   

குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமின்றி ,மாடர்ன்,  கிளாமர், ரொமான்டிக் கதாபாத்திரங்களிளும்  பின்னி பெடல் எடுத்தார். தற்போது சீரியல்களின் நாயகியாகவும், சினிமாவில் குணசத்திர வேடத்திலும் நடித்து வருகிறார் குஷ்பூ.

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சிஅவர்களை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்கள் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக ஜொலிக்கிறார்கள். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

இவர் இறுதியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் தனது காலில் அடிபட்டதாக கூறி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

தற்பொழுது நடிகை குஷ்பூ சினிமாவை தாண்டி அரசியலும் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களையும், அரசியல் கருத்துக்களையும், குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை குஷ்பூ தற்பொழுது தனது  இளம் வயதில் மாடர்ன் உடையில் ஜெர்மனியில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவர் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருடன் காணப்படுகிறார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை குஷ்பூவா இது? வாவ் எவ்வளவு அழகா இருக்காங்க’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….