4ம் ஆண்டு திருமண நாளை குடும்பத்தோடு கொண்டாடிய பிரபல நட்ச்சத்திர ஜோடி… வைரலாகும் புகைப்படங்கள்… குவியும் வாழ்த்துக்கள்…

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் ஆர்யா- சயீஷா தம்பதியினர். நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

   

தற்பொழுது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ‘கஜினிகாந்த்’ என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்கள் குழந்தைக்கு அரியானா என்று பெயர் சூட்டியுள்ளனர். மார்ச் 10 2019 அன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. நேற்று இவர்களுக்கு நான்காம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது.

எனவே இவர்கள் தங்களது மொத்த குடும்பத்துடன் வெளியே சென்று உணவு சாப்பிட்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்….