இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி பிரபலம் யார் தெரியுமா?… அட இவரா… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். இவர்  2002ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது.

   

தற்போது பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து இறுதியாக ‘வாத்தி’ திரைப்படம் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. இத்திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனமே கிடைத்துள்ளது.

மேலும் வாத்தி திரைப்படம் நான்கே நாட்களில் மட்டும் 67 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டு வருகிறது. தற்பொழுது நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து துறைகளிலும் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டுள்ளார்.

சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டுவருகிறது. மேலும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து இவர்கள் யார் என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் தனுஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தில் நடிகர் தனுஷ் அவரின் சகோதரிகளுடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படங்கள் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் தனுஷா இது? ஆள் அடையாளம் தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.