இரண்டாவது மகனின் பிறந்த நாளை லண்டனில் கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி…  வைரலாகும் அழகிய புகைப்படங்கள் …

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் சென்னையை சேர்ந்தவர்.

   

சென்னையில் உள்ள அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில்  பள்ளிப்படிப்பை  முடித்தார்.

அதை தொடர்ந்து   சென்னையில் உள்ள லயோலோ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்  பட்டம் பெற்றார்.

இவர் நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்த பிறகு  . மும்பையில் உள்ள கிஷோர் நமித் கபூர் நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சியும் பெற்றார்.

இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தை திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி,  பூலோகம்,  பேராண்மை,  சம்திங் சம்திங்,  மழை, தாஸ்,  தில்லாலங்கடி,  தனி ஒருவன்,  டிக் டிக் டிக் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் இயக்குனர்  மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றார்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ‘இறைவன்’ என்ற படம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து இவர் சைரன்,  ஜீனி, ஜே ஆர் 30 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் மகன்களில் ஒருவர் ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவரது மனைவி சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது தனது குடும்பத்துடன் லண்டனுக்கு இன்ப  சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது இரண்டாவது மகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

தற்போதுஅந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.