உலக நாயகன் கமலஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் உலக நாயகன் எனவும் தனது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தற்பொழுது நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

நடிகர் கமலஹாசன் 1978ல் பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 1988 விவாகரத்து பெற்றனர். இதைத் தொடர்ந்து கமலஹாசன் சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்பொழுது நடிகை வாணி கணபதி கன்னட நடிகர் அம்பரீஷின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் .திருமணத்தில் 80களில் கொடி கட்டி பறந்த முன்னணி நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ராதிகா, லீசி, மேனகா, சுகாசினி உள்ளிட்ட பல நடிகைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வாணி கணபதியும் கலந்து கொண்டுள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உலகநாயகன் கமலஹாசனின் முதல் மனைவி வாணி கணபதியா இது?  என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்….