தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசுவுக்கும்  இடம் கொடுக்காத ஒரே நடிகை யார் தெரியுமா?… என்னது இவர் தல அஜித்துடன் கூட நடிச்சிருக்காங்களா?…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனி  இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்காக வேண்டி தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் நடிகர் அஜித் இதுதொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

   

தற்பொழுது அஜித்துடன் சூப்பர் ஹிட் படத்தில் ஜோடியாக நடித்த ஹீரோயின் எந்தவொரு கிசுகிசுவில் சிக்காத ஹீரோயின் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. நடிகை தேவயானி தான். நடிகர் அஜித்தும் தேவயானியும் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் காதல் கோட்டை. இத்திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக ஹீரோயின்கள் தங்களுடன் இணைந்து நடிக்கும் சக நடிகர்களுடன் எப்பொழுதும் ஜாலியாக பேசி பழகுவார்கள். ஆனால் தேவையானி மட்டும் படப்பிடிப்பிற்கு வந்தவுடன், அவரது காட்சிகள் நடித்து முடித்ததும் யாரிடமும் பேசாமல் சென்று விடுவாராம். தற்பொழுது வரை இவர் சினிமா ரீதியாக எந்த ஒரு பார்ட்டிக்கு,ம் பங்க்ஷனுக்கும் சென்றது இல்லை என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கிசுகிசுக்கும் இடம் கொடுக்காத ஒரே நடிகை என்ற பெருமை பெற்றவர் நடிகை தேவயானி . நடிகை தேவயானி திரை உலகின் உச்சத்தில் இருக்கும் பொழுது இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணமே சற்று பிரச்சினைகளை சந்தித்தது.  ஆனால் காதலித்தவரையே கரம் பிடித்து தற்பொழுது தனது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நடிகை தேவயானி.