பாட்ஷா படத்தில் கமல் ஹாசன்.. இதுவரை பலரும் பார்த்திராத அன்சீன் போட்டோஸ்..!!

 நடிகர் ரஜினி காந்த்

நடிகர் ரஜினி காந்த் 1975 ஆம் ஆண்டு, இயக்குனர் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தின் மூலம் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.தமிழ் , இந்தி , தெலுங்கு , கன்னடம் , பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களை உள்ளடக்கிய 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார் . மேலும் திரைப்படங்களில் அவரது தனித்துவமான பாணியிலான வரிகள் மற்றும் தனித்தன்மைகளுக்காக அறியப்பட்ட அவர், இந்தியா முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

   

இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிய நிலையில், இப்படத்தை தொடர்ந்து லால் சலாம் படம் உருவாகி வருகிறது. மேலும் TJ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக உள்ள பாட்ஷா படம், இன்று வரை டாப் 5 ரஜினியின் படங்கள்  பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.

அன்ஸீன் புகைப்படம்

இந்நிலையில் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் கமல் ஹாசன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, ரசிகர்களை குழப்பி வருகிறது. இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..