ஜோடி பொருத்தம் சூப்பர்.. சுத்தி போடுங்க.. காதலர் தினத்தை தன் மனைவியுடன் கொண்டாடிய பிக்பாஸ் கவின்.. வைரல் ரொமான்டிக் வீடியோ..!!

நடிகர் கவின் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தபோது லாஸ்லியாவை காதலிப்பதாக கூறிய நிலையில், அவர்கள் இருவரும் ஜோடியாகவே சுற்றினர். பின் திருமணம் பற்றி கூட அந்த ஷோவில் பேசினார்கள். ஆனால் இந்த ஷோ முடிந்து வெளியில் வந்தபின், அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டனர். மேலும் இருவருக்கும் செட் ஆகாததால் பிரிந்துவிட்டதாக லாஸ்லியா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.

   

விஜய் டிவி சீரியல் மூலம் தமிழ் சினிமா பயணத்தை ஆரம்பித்த கவின் அதன்பின் தொகுப்பாளராகவும் தற்போது சினிமாவில் பிரபலமான நடிகராகவும் முன்னேறினார். எனவே இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தன் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரல் வருகிறது. இதோ,

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arunprasath_photography)