SK-21 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா..? சிவகார்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு.. வெளியாகும் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர். தொடக்க காலத்தில் தொகுப்பாளராக இருந்த அவர் தன் நகைச்சுவைத்திறன் மற்றும் நடிப்பு திறமையால் திரைத்துறையில் அடி எடுத்து வைத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

   

தற்போது முன்னணி கதாநாயகனாக பிசியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால், அவருக்கான இடம் தமிழ் சினிமாவில் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிப்பதற்கும் அவர் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இதனிடையே இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரின் 21-ஆவது திரைப்படத்திற்கான டைட்டில் நாளை அறிவிக்கப்படுவதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார். அதாவது, பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள்.

அதனை முன்னிட்டு நாளை அந்த திரைப்படத்திற்கான டைட்டில் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று  அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படம் ராணுவ வீரரின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால் அது தொடர்பான தலைப்பாகத் தான் இருக்கும் என்றும் பிஸ்மி கூறியிருக்கிறார்