
நடனக் கலைஞரும், நடிகையுமான காயத்ரிரகுராம், பிரபல நடன இயக்குனரான ரகுராமின் மகள் ஆவார். இவரது அக்கா சுஜா ரகுராம். இவர் தொழிலதிபரான வேணுகோபாலை இளவயதிலேயே திருமணம் செய்து கொண்டார். பின்னர் அமெரிக்காவில் செட்டில் ஆன சுஜா ரகுராம், அவர்களின் காதல் கதையை பற்றி தனியார் சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் நான் “12 ஆம் வகுப்பு முடித்த பின், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, என் கணவரை சந்தித்தேன். அவர் என்னை பார்த்த உடனே மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். நானும் அதற்கு என் அப்பாவிடம் வந்து பேசுங்கள் என்றும் அவர் ஓகே என்று சொன்னால், எனக்கும் ஓகேதான். இவ்வாறு சொல்லி விட்டு வந்தேன். அப்போது அவரை பார்த்த உடனே, முதலில் என் தங்கை காயத்ரியிடம் போய் இந்த விஷியத்தை சொன்னேன்.
இதனையடுத்து இதை பற்றி என் அப்பாவிடம் சொல்ல, அவரும் வரச்சொல் பார்க்கலாம் என்றார். உண்மையை சொன்னால் யாராலும் இதனை நம்ப முடியாது. எங்களுடைய காதல் பார்த்த முதல் சந்திப்பில் வந்தது. மேலும் என் அப்பாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர் என்பதால், திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். இவ்வாறு