
‘சரவணா ஸ்டோர்ஸ்’ கடைகளின் உரிமையாளர் தி லெஜண்ட் சரவணன் அருள். இவர் தற்பொழுது ஹீரோவாகவும் அறிமுகமாகிவிட்டா.ர் முன்பெல்லாம் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த சரவணன் அருள் அண்மையில் வெளிவந்த ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார்.
இவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள இத்திரைப்படத்தை மக்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்தும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இத்திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. திரைப்படத்தை ஜெடி & ஜெர்ரி இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த வாரம் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. இந்நிலையில் லெஜண்ட் சரவணன் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவருக்கு சென்னையில் பல சொகுசு வீடுகளும் உள்ளது. நடிகர் லெஜண்ட் சரவணனுக்கு இரண்டு பெண்கள். அவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரான திருநெல்வேலி பிரம்மாண்டமான வீட்டை கட்டியுள்ளார் லெஜென்ட் சரவணன்.

தற்பொழுது இவரின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 750 மில்லியன் டாலராம். இந்திய மதிப்பில் 6 ஆயிரம் கோடி சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. 6000 கோடி சொத்துக்களை குவித்து வைத்துள்ளாரா? லெஜெண்ட் சரவணன் என்று வாயைப் பிளந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.