இந்த சிறு வயது புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

நடிகை ஆண்ட்ரியா தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் ‘திறமையான நடிகை’ என்று பலரால் சொல்லப்படுபவர் நடிகை ஆண்ட்ரியா. வடசென்னை, தரமணி போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

   

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா டப்பிங்கும் கொடுத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். சினிமா துறையில் கொடி கட்டி பறந்த இவர் நடுவில் ஏராளமான கிசு கிசுக்கள், சர்ச்சைகளுக்கு உள்ளானார். அதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர் சினிமா துறையை விட்டு சில நாட்கள் விலகி இருந்தார்.

இதைத் தொடர்ந்து இவர் தற்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் அதிகம் தேர்வு செய்து நடத்தி வருகிறார். தற்பொழுது இவர் மாளிகை, பிசாசு 2 , நோ என்ட்ரி போன்ற பல படங்களை கமிட் செய்து பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இணையத்தில் சமீப காலமாகவே பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஆண்ட்ரியாவின் சிறு வயது புகைப்படம் என்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ஆண்ட்ரியாவா இது? இவ்ளோ க்யூட்டா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…