தனுஷின் அண்ணன் செல்வராகவனை திடீரென சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… என்னவா இருக்கும்?… வைரலாகும் புகைப்படம்… குழப்பத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடங்கள் நீடித்த இத்திருமண பந்தம் திடீரென முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து கொண்டனர்.

   

இவர்கள் அவ்வப்பொழுது தங்களது மகன்களின் பள்ளி விழாக்களிலும் மற்றும் மகன்களுக்காக மட்டும் புகைப்படங்களிலும் ஒன்றாக இணைந்து காணப்படுகின்றனர். தற்பொழுது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், அவரவர்கள் தங்களது சினிமா கேரியேரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷின் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் இறுதியாக ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா சினிமாவில் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் 3,  வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக படங்கள் ஏதும் இயக்காமல் இருந்து வந்த நிலையில். தற்போது இவர் இயக்குனராக களம் இறங்கி ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் அவரது தந்தையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவனை தேர்ந்தெடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது குறித்து அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….