
நயன்தாரா- விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்தாரா- விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
பின் இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்த படி, கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் கடற்கரை ஓரம் திறந்தவெளியில், அலங்கரிக்கப்பட்ட மேடையில், இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். ஆனால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இவர்களின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. பின்னர் அதை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இவர்களின் திருமணம் கொரோனா சமயத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்ட சூழலில் நடைபெற்றது.
எனவே இவர்களின் திருமண குறித்த காட்சிகளை ரசிகர்கள் பார்க்க ஆர்வமாய் காத்திருந்தனர். இந்த நிலையில் இவர்களின் திருமண வீடியோவை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியதை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு, அந்த அளவு பெரியதாக பிடிக்கவில்லை என தெரிகிறது.
ஏனென்றால் அதில் மிகச் சில பிரபலங்கள் தான் பங்கு பெற்ற நிலையில், அவர்களும் கொரோனாவின் காரணமாக மாஸ்க் போட்டு உள்ளனர். அதனால் தெளிவாக அவர்களின் முகங்களும் தெரியவில்லை எனவும் நயன்தாரா- விக்னேஷ் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் தற்போது ஆகப் போகிறது எனவும் அந்த நிறுவனம் கூறினர்.
எனவே காலதாமதத்தையும் கருத்தில் கொண்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் இவர்களின் திருமண வீடியோவை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அதிரடி முடிவால், நயன்தாரா-விக்னேஷ் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.