
சின்னத்திரையில் பிரபலமாகி வெகுவாக ரசிகர்களை கவர்ந்த பிரபலம் தான் நடிகர் பிரஜின் பத்மநாபன்.
இவர் முதன் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார்.
அதன் பிறகு துணை நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கிய இவர், ஜீவா நடித்த டிஸ்யூம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் மணல் நகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் மலையாளத் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
அதன் பிறகு சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த இவர் சீரியல் நடிகை சந்திரா எமியை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. சமீபத்தில் கூட இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதாக ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார்.
தற்போது இவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.