ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மாஸ் ஹீரோ… அவரா இது?… வைரலாகும் புகைப்படம்… நீங்களே பாருங்க…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பான் இந்திய நடிகராக வலம் வருப்பவர் நடிகர் ப்ரித்விராஜ். இவர் 2002ல் வெளியான ‘நந்தனம்’ என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உறுமி  உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

இவருக்கு 2006ல் சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதும் கிடைத்தது. இவர் நடிப்பில் இறுதியாக கடுவா திரைப்படம் ரிலீஸானது. இத்திரைப்படம் தமிழில் மார்ச் 3 தேதி ரிலீசாகவுள்ளது.

பாலிவுட் திரைப்படமொன்றை முடித்த நடிகர் பிரித்விராஜ் தற்பொழுது பாகுபலி பிரபலம் பிரபாஸ் உடன் இணைந்து ‘சலார்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது தனது அடுத்த படத்திற்காக நடிகர் பிரித்திவிராஜ் தனது உடம்பை உடற்பயிற்சியின் மூலம் பல மடங்கு கூட்டியுள்ளார்.

அந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் பிரித்விராஜா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவரின் வைரல் புகைப்படம்….