செம மாஸ்… வாரிசு மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய ஜெயிலர்…! பாக்ஸ் ஆபிசில் சாதனை…!!

ஜெயிலர் படம்

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் உலகெங்கும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி, அமோக வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் முதல் நாள் வசூலே எதிர்பாக்காத உச்சத்தை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினி மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி, மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படம் பார்க்க ஆர்வமோடு தியேட்டருக்கு வருகின்றனர்.

வாரிசு மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய ஜெயிலர்! பாக்ஸ் ஆபிசில் சாதனை | Jailer Beat Varisu In Us Box Office On First Day

   

ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு தெரியுமா? | Jailer Movie Review In Tamil 2023

வாரிசு வசூலை முந்தியது..

இந்நிலையில் அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு படம் மொத்தமாக வசூலித்த தொகையை ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வாரிசு மொத்தமாக $1,141,590 வசூலித்து இருக்கும் நிலையில் ஜெயிலர் தற்போது $1,158,000 வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jailer: 'வாரிசு' படத்தின் மொத்த வசூலையும் ஒரே நாளில் முந்திய 'ஜெயிலர்': தட்டி தூக்கிய தலைவர்.! - rajini's jailer beats vijay's varisu in usa box office - Samayam Tamil