
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தான்
நடிகை சித்தி இத்னானி. இவர் தனது முதல் படத்திலேயே திறமையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவரை ரசிகர்கள் கண்ணக்குழி அழகி என்ற பட்டப் பெயருடன் அழைத்து வருகின்றனர். இவர் குஜராத், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் இவர் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பையும், ரசிகர்களுக்கிடையே பெற்று தந்தது. இவர் சமீபத்தில் தினத்தந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அந்த நடிகையிடம், நீங்கள் ஏதோ அறுவை சிகிச்சை சமீபத்தில் செய்து கொண்டதாக தகவல் வெளியானதே.. உண்மையா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ரீசன்டா நான் எடுத்த போட்டோ சூட்ல, கன்னத்தில் விழும் குழி தெரியவில்லை. இதை ஒரு பிரச்சனையாக பலர் கிளப்பினர்.
அதாவது அந்த கன்னத்தில் விழும் குழி எனக்கு பிடிக்கவில்லை என்று நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டேன்னு ஒரு தகவலைப் பரப்பி வந்தார்கள். ஆனால் நான் அந்த போட்டோ சூட் எடுக்கும்போது சிரிக்கவில்லை. அதனால் தான் கன்னத்தில் குழி விழவில்லை. இதனையடுத்து நான் கன்னத்தில் குழி விழுகிற மாதிரி ஸ்மைல் செய்த போட்டோ ஒன்றை பதிவிட்ட பின்னரே அனைவரும் நம்பினர் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.