40 வருடத்தில் மட்டும் 310 கோடி தான தர்மம் செய்த ஒரே நடிகர்.. யானைகளையே தானமாக வழங்கிய வள்ளல்..

சுமார் 40 ஆண்டுகளாக மன்னன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஆகவே வாழ்ந்த ஒரே தமிழ் நடிகரை, ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். கோலிவுட்டில் சுமார் 40 வருடங்களாக 310 கோடி தான தர்மம் செய்த ஒரே நடிகர் இவர்தான் என்று, தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கும் தகவல் ஒன்று ரசிகர்களின் மத்தியில் வைரலாக பேசப்படுகிறது.

   

ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர். அதன் பிறகு 1952 ஆம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிப்புச் சக்கரவர்த்தி தான் செவிலியர் சிவாஜி கணேசன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சுமார் 288 படங்களில் நடித்தது மட்டுமின்றி தமிழில் மட்டும் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து அசத்தியவர்.

கடவுளுக்கும் சரித்திர ஹீரோகளுக்கும் உருவம் கொடுத்த ஒப்பற்ற கலைஞன்... சிவாஜி கணேசனின் சிறந்த படங்கள்! | Actor Sivaji Ganesan's top 10 movies on his birthday - Tamil ...

இப்போது வரை இளம் நடிகர்களின் இன்ஸ்பிரேஷன் ஆக இருந்து வரும் சிவாஜி, நிஜ வாழ்க்கையில் மன்னன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஆகவே வாழ்ந்து இருக்கிறார். இவருடைய 1953 முதல் 1993 வரை செய்திருக்கும் தான தர்மத்தை பிரபலம் ஒருவர் ஆய்வு செய்து அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுவது மட்டுமல்லாமல் சிவாஜியின் இமேஜை வேற லெவலுக்கு எடுத்து சென்று இருக்கிறது.

அழியாப்புகழின் உச்சம்; பிரதியெடுக்க முடியாத கலைஞன் - சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று

அத்துடன் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த அடுத்த வருடம் தொடங்கி, சுமார் 40 வருடங்களாக சிவாஜி செய்த தானதர்மங்கள் மட்டும் 310 கோடியாம். அதுமட்டுமின்றி இலங்கையில் ஒரு ஹாஸ்பிடலையே கட்டி கொடுத்து இருக்கிறார். அத்துடன் காமராஜர் துவக்கி வைத்த ஊட்டச்சத்து சத்துணவு திட்டங்களை, ஜவஹர்லால் நேரு அறிமுகம் செய்த உடனேயே அதற்காக 1 லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்த முதல் நடிகர் சிவாஜி.

சிவாஜி கணேசன் சுவாரசியத் தகவல்கள்: அமெரிக்க நகரில் ஒரு நாள் மேயர், சீதை பாத்திரம், நடிக்க விரும்பி நிறைவேறாமல் போன வேடம் - BBC News தமிழ்

அதேபோன்று பாகிஸ்தான் போர் நடந்தபோது அவரிடம் இருந்த 100 பவுன் எடையுடைய பேனாவை அதற்காக நன்கொடையாக கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் போட்டிருந்த 450 பவுன் நகையையும் கழட்டிக் கொடுத்து விட்டார். இதன்பிறகு அவருடைய கடைசி காலங்களில் யானைகளையே தான தர்மமாக கொடுத்திருக்கிறார்.

மேலும் யானைப்பாகன் ஒருவர் சிவாஜி இடம் வந்து யானையும் தானும் சரியாக சாப்பிட முடியவில்லை என்று உதவி கேட்டபோது, 2 ஏக்கர் நிலத்தை வாங்கி அதை பட்டா போட்டு அந்த பாகனிடம் கொடுத்து அதில் விவசாயம் செய்து நீயும் சாப்பிட்டு யானையும் பட்டினி போட்டு விடாதே என்று சொல்லி இருக்கிறார். இவ்வளவு தான தர்மம் செய்த சிவாஜி, ஒருபோதும்இதைப் பற்றி எல்லாம் வெளிப்படுத்தியது கிடையாது. ஏனென்றால் தான தர்மம் செய்வது ஒரு மனிதனின் தவம் என்பதை ஆணித்தரமாக நம்புபவர்.