தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது இவர் நடிப்பில் அயலான் படம் அதிகமான கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு உருவாகி வருகிறது.
இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அயலான் படத்தின் டீஸர் வரும் 6 ஆம் தேதி முதல் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. மேலும் அயலான் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது படத்தின் டீஸர் வரும் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.