
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் தனது க்யூட்டான புன்னகையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து, புன்னகை அரசி என்று அழைக்கபட்டவர் நடிகை சினேகா. இவர் தமிழில் என்னவளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அறிமுகமான புதிதில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காவிட்டாலும், 2003-இல் வெளியான வசீகரா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். மேலும் இவர் திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.
மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் இவர்களின் மகனான விஹானுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அதுவும் அவர்களுடைய மகன் விருப்பப்படி கோல்ட் ஹார்ட் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளோடு சேர்ந்து ஜாலியாக கொண்டாடியுள்ளனர்.
மேலும் அந்தக் குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கியும், பல கலை நிகழ்ச்சிகளை நடத்தியும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும் சந்தோசமாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் சினேகா தன்னுடைய instagram பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.