‘வைகைப்புயல்’ வடிவேலுவின் மருமகளை பாத்துருக்கீங்களா?… அட இவுங்கதானா?…. இத்தனை நாளா இது தெரியாம போச்சே…

தமிழ் சினிமாவில்  ‘வைகைப்புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர்.  ஃப்ரெண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி போன்ற எண்ணற்ற  படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின. தனக்கென்று தனி பாணியை நகைச்சுவையில் ஏற்படுத்திக் கொண்டவர். 1991 இல்’ என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் முதன் முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார் .

   

இப்படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம்  எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘மாமன்னன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகர் வடிவேலுவுக்கு கார்த்திகா மற்றும் சுப்பிரமணி என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தனது மகன் சுப்பிரமணி திருமணத்தில் மகன் மற்றும் மருமகளுடன் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அட இவர்தான் நடிகர் வடிவேலுவின் மருமகளா?’ என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..