
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் ஒருவர்.
இவர் தமிழில் முதன் முதலாக சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
அதை தொடர்ந்து மைனா என்ற திரைப்படத்தில் நடித்தார். துளி கூட மேக்கப் இல்லாமல் நடித்து அந்த திரைப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பின்னர் தெய்வத்திருமகள், சேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, ஆடை உள்ள பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து நடிகை அமலாபால் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஓரிரு வருடங்களில் முடிவுக்கு வந்தது.
பின்னர் தனுசுடன் காதலுக்கு கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆடை என்ற திரைப்படத்தில் ஆடை எதுவும் இல்லாமல் நடித்து மேலும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் வேறொருவருடன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் திடீரென அவரின் நீண்ட நாள் காதலரான ஜெகதீஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. திருமணம் முடிந்து ஒரு மாதத்திலேயே தான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார்.
தற்போது அவருக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது.