
மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை இவானா. இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்பொழுது உள்ள இளைய சமுதாயத்தில் காதலில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை இப்படம் காட்டியது. காதல் ஜோடிகள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது.
இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறி உள்ளார் நடிகை இவானா. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படம், கிட்டத்தட்ட ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்தது. தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையையும் phanton ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது.

ஹீரோயினாக நடித்த முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் ஆனதும் இவானாவின் மார்க்கெட் எகிறி உள்ளது. தற்போது இவர் நடிப்பில் கள்வன், எல்ஜிஎம், காம்ப்ளக்ஸ் போன்ற படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இவானா. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ட்வின் சகோதரனின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அவரின் புகைப்படம்…