‘எனக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிடுச்சு’… மகிழ்ச்சியில் ஸ்பெஷலான புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்… குவியும் லைக்ஸ்கள்…

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மகாலட்சுமி. இவர் லிப்ரா ப்ரொடக்சன் தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து செப்டம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

   

திருமணமான நாள் முதலில் இவர்களின் திருமணம்தான் சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது.

நடிகை மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

ரவீந்தருக்கும் இரண்டாவது திருமணம் தான். இவர்களை பலர் விமர்சித்தும், பலர் இவர்களுக்கு வாழ்த்து கூறியும் வந்தனர்.

அனைத்து விமர்சனங்களையும் சமாளித்து இவர்கள் தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் இவர்கள் பேட்டிகளின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இவர்களை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல சம்பவங்களையும் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக ரவீந்தர் தான் அதிகப்படியான புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடுகிறார்.

இந்நிலையில் மார்ச் 1ம் தேதியுடன் இவர்களுக்கு  திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது.

எனவே மகிழ்ச்சியில் தனது மனைவியுடன் ஸ்பெஷல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரவீந்தர்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், தங்களது வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…