தோழியுடன் நேபாளத்தில் ஜாலியான ட்ரிப்.. நடிகை ஜோதிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!

முன்னணி நடிகையான ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஒன்றாக நடித்தனர்.

   

அதன் பிறகு ஜோதிகா நடித்த பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சில்லுனு ஒரு காதல், உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

கடந்த 2005- ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் ஜோதிகாவும் சூர்யாவும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியினருக்கு தியா தேவ் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சினிமாவிலிருந்து விலகினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் ரீஎன்றி கொடுத்தார் ஜோதிகா.

அதன் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை ஜோதிகா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கடந்த 19 ஆம் தேதி தமிழகம் உள்பட மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடந்த முடிந்தது. ஆனால் ஜோதிகா ஓட்டு போட வரவில்லை.

அவர் ஏன் வரவில்லை என ரசிகர்களும் செய்தியாளர்களும் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஜோதிகா தனது தோழியுடன் நேபாளத்தில் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அதன் மூலமாக தான் ஜோதிகா தனது தோழியுடன் டிருப் சென்றிருப்பது தெரியவந்தது. அங்கு தான் கண்ட ரசித்த அனைத்தையும் ஜோதிகா வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.