கணவரின் இறப்புக்கு பின்னர் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மீனா… எப்படி கொண்டாடினார் தெரியுமா?… வைரலாகும் வீடியோ இதோ…

நடிகை மீனாவின் மகளாகிய நைனிகா தனது அப்பாவின் இறப்பிற்கு பிறகு அம்மா மீனாவுடன் மட்டும் கொண்டாடும் பிறந்தநாள் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை மீனா. இவர் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது வரை சினிமாவில் நடித்து ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் நடிகை மீனா. இவரை போலவே அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் நடித்த ‘தெறி ‘திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

   

தற்பொழுது இவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை மீனாவின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது இவர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாக கணவருடன் மகிழ்ச்சியாக இல்லற வாழ்வை நடத்தி வந்த இவரது வாழ்க்கையில் திடீரென புயல் அடித்தது.

நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் 2022ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருக்கு புறா எச்சத்தில் இருந்து தொற்று பரவியதால் உடல்நல குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த துயரத்தில் இருந்து நடிகை மீனாவை அவரது தோழிகள் படிப்படியாக மீட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து மீனா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இது முற்றிலும் பொய்யான செய்தி என்று அவரே பேட்டி கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமீபத்தில் இவர் விளம்பர படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகிய வைரலானது. தனது கணவரின் இழப்பிலிருந்து படிப்படியாக தற்பொழுது மீண்டும் வருகிறார் நடிகை மீனா. ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடிகை மீனாவின் மகள் நைனிகாவிற்கு பிறந்தநாள். தனது அப்பா இறந்த பிறகு நைனிகா தனது அம்மாவுடன் மட்டும் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. இப்பொழுது தனது மகள் நைனிகாவிற்கு வாழ்த்து சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ….