டெலிவரிக்கு முந்தைய நாள் நடிகை நமீதா செய்த செயல்… செம கியூட்… வர்ணிக்கும் ரசிகர்கள்…. வீடியோ இதோ….

நடிகை நமீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை நமீதா. மிஸ் சூரத், மிஸ் இந்தியா போன்ற பட்டங்களை பெற்றவர் நடிகை நமீதா.

   

விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் போன்றவர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவை, சாணக்யா, ஆணை, எங்கள் அண்ணா, அழகிய தமிழ் மகன், பில்லா, இந்திர விழா, ஜகன்மோகினி ,பம்பரக் கண்ணாலே ,வியாபாரி, நான் அவனில்லை.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘மியா’. நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் 2017 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட நடிகரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பின்னர் ஒப்பந்தம் செய்த படங்களில் மட்டும் நடித்து முடித்தார்.

அதோடு இவர் உடல் எடையை குறைத்து அப்படியே ஆளே மாறி இருந்தார். கடந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என்று தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்.

தற்பொழுது நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பெறுவதற்கு முந்தைய நாள் மொபைல் போனில் ஒரு காமெடியை கண்டு விழுந்து விழுந்து சிரித்த வீடியோவை பகிர்ந்துள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ இதோ….