அம்மா கேரட்டில் நடிக்கும் நடிகை ராஜேஸ்வரியா இவர்!!!. “யூத் லுக்கில்” வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்….

இன்றய காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு  உள்ளது .

   

அப்படி சமீபத்தில் வெளியாகி  மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல் தான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. இந்த சீரியல்  எஸ் எம் எஸ் மூவிஸ்  தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் திரையிடப்படுகிறது.

இந்த சீரியலில் பதினே குமார், ராஜேஸ்வரி, சந்தோஷ், மனுஷ் மற்றும் ஆஷாராணி நாகேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலானது  ஒரு பெண்ணுக்கும் அவரது மாற்றாந்தாய்க்கும் இடையேயான உறவை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியல் துஜ்சே ஹை ரப்தா என்ற இந்தி சீரியலின் ரீமேக்ஆகும். இந்த சீரியல் தொடக்கத்தில் திவ்யா பத்மினி அம்மா கதாபாத்திரத்தில்  நடித்து வந்தார். சில மாதங்களில் அவர் விலகியதை தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தில்  நடிகை ராஜேஸ்வரி நடித்து வருகிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே 2’ என்ற சீரியலில் நடித்துள்ளார். நடிகை ராஜேஸ்வரி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். அடிக்கடி தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர் யூத் லுக்கில் இருக்கும்  புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ராஜேஸ்வரி இவர்  என்று   ஆச்சரியத்தில் உள்ளனர். தற்போது இந்த  புகைப்படம் இணையத்தில்  வைரலாகி வருகிறது.