33 வயதில் அடி எடுத்து வைக்கும் ரட்சிதா மகாலட்சுமி… பிறந்தநாள் கொண்டாடிய வைரல் புகைப்படங்கள்…!!

தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரட்சிதா மகாலட்சுமி. பெங்களூருவை பூர்வீகம் கொண்ட இவர் தொடர்ந்து கன்னடத்தில் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

   

ஆனால் தமிழில் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தார்.

இந்த சீரியல் இவரை மிகவும் பிரபலமாகியது. இவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இவருடன் சேர்ந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிரிவுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவர் பைனல் வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 நாட்கள் கழித்து எவிக்சன் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ள fire திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் ரட்சிதா மகாலட்சுமி.

இவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஃபயர் பட குழுவினர் இவரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் மிகவும் ஹாட்டான லுக்கில் இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் தனது பிறந்த நாளை தானே கொண்டாடி இருக்கும் ரட்சிதா கையில் ஒயின் உடன் இருந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.