அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட விஷால் பட நடிகை… இப்படி ஒரு நோயா?… அவரே வெளியிட்ட புகைப்படம்…. ஷாக்கான ரசிகர்கள்…

நடிகை சமந்தாவை தொடர்ந்து தற்பொழுது முன்னணி நடிகை ஒருவர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது..

இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கத்தில் 2006 இல் வெளியான ‘சிலப்பதிகாரம்’ படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவர் முதன் முதலில் 2005 இல் மயூகம் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து பஸ் கண்டக்டர், அற்புதம், லங்கா, மது சந்திரலேகா, பாபா கல்யாணி போன்ற பல திரைப்படங்களில் மலையாளத்தில் நடித்து அசத்தினார். நடிகை மம்தா நடிகையாக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகி என பன்முக திறமைகளை தன்னில் கொண்டவர்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இரண்டு முறை பிலிம் பார் விருது, 2006ல் தெலுங்கில் சிறந்த பின்னணி பாடகி மற்றும் 2010ல் மலையாளத்தில் சிறந்த நடிகை மற்றும் கேரள மாநில திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்றவர். இதைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் எனிமி திரைப்படம் வெளியானது. தற்பொழுது சினிமா நடிகைகள் பலரும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா மயோசிட்டிஷ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவரை தொடர்ந்து தற்பொழுது முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மம்தா மோகன் தாஸ் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது 38 வயதான மம்தா மோகன் தாஸ் தோல் நிறமே இழத்தல் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இதை குறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Mamta Mohandas (@mamtamohan)