திருமணமாகி 20 வருடங்கள் கழித்து… கணவரை விவாகரத்து செய்ய போகிறாரா தொகுப்பாளினி அர்ச்சனா…?? இதுதான் காரணமா?… அவரே கூறிய அதிர்ச்சி தகவல் உள்ளே…

சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபுவுடன் இணைந்து தொகுப்பாளர் பணியை தொடங்கினார். 90ஸ் காலகட்டத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து மக்கள் மத்தியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

   

இதை தொடர்ந்து சொர்ணமால்யா விட்டுச் சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார். இவர் 2004ல் வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார் அர்ச்சனா. இவருக்கு சாரா என்ற ஒரு மகள் உள்ளார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகம’ ரியாலிட்டி ஷோவில் தொகுபாளினியாக களம் இறங்கினார். தற்பொழுது அர்ச்சனாவும் அவரது மகளும் சாராவும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர்மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது கணவர் வினீத்தை விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் செய்திகள் வைரலாக்கப்பட்டு வருகிறது. இவரின் கணவர் வினீத் தற்போது இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அர்ச்சனா மற்றும் வினீத் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருந்ததாக அதிர்ச்சி தகவலை அவரே தற்போது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

“இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பிரச்சனை வந்தது, ஒரு மாதத்திற்கு முன்பு பிரிய முடிவெடுத்துவிட்டோம். ஆனால் 15 நாட்கள் முன்பு கணவர் வினீத்துக்கு திடீரென விசாகபட்டினத்திற்கு ட்ரான்ஸ்பர் போட்டுவிட்டார்கள்.

‘என் மகள் ஸாரா எங்கள் இருவரிடமும் பேசினார். ஒருவரை விட்டு இன்னொருவர் வாழ முடியுமா என யோசித்துக்கொள்ளுங்கள்’ என கூறினாள். 20 வருடங்களுக்கு முன்பு எப்படி சந்தித்து காதலித்தோமோ அதை போல தான் கடந்த 15 நாட்களாக இருந்து வருகிறோம்’ என அர்ச்சனா கூறியுள்ளார். தற்பொழுது இந்த பேட்டியானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.