பெண் வேடத்தில் மிரட்டும் யோகி….! பெண்கள் தினத்தில் செம சூப்பராக வெளியான புகைப்படங்கள்….. உங்களுக்காக இதோ…

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு.

   

நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

அண்மையில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அவர் நடித்த வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தந்தையாக சீரியசான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள பொம்மைநாயகி திரைப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் தன்னுடைய திறமையால் தற்போது பெரிய நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் யோகி பாபு.

நடிகர் யோகி பாபு தற்போது மிஸ் மேகி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். லதா ஆர். மணியரசு இயக்கியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார்.

ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த திரைப்படத்தில் யோகி பாபு பெண் வேடத்தில் காட்சியளிக்கிறார். இது பார்க்கும்போது மிகவும் வித்தியாசமான முயற்சியாக இருந்தது.

கடந்த எட்டாம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. உலகில் உள்ள அனைத்து பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு மிஸ் மேகி பட குழுவினருடன் சேர்ந்து பெண்கள் தினத்தை சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.