‘குசேலன்’ நடிகை ஷஃப்னா நிஜாம் கணவரை பார்த்து உள்ளீர்களா?.. வைரலாகும் புகைப்படம்…

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் குசேலன் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

   

இப்படத்தில் பசுபதி,  ரஜினிகாந்த்,  பிரபு மீனா,  வடிவேலு,  சந்தானம்,  பிரம்மானந்தம்,  நயன்தாரா,  மம்தா மோகந்தாஸ்,  விஜயகுமார்,  நிழல்களின் ரவி,  சின்ன ஜெயந்த்,  மதன் பாப்,  போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில்  பசுபதியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை ஷஃப்னா நிஜாம் .இவர் மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.1998 இல் மலையாளத்தில் வெளியான  ‘சிந்தாவிஷ்டயாய ஶ்யாமலா’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பிரணயவர்ணங்கள், புலர்வேட்டம், கதை பறையும்போல்,  போன்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தமிழிலும் குசேலன் என்ற படத்தில் தமிழில் ‘தனி’ என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் அதிகமாக மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களிலும்  நடித்துள்ளார். இவர் வெள்ளித் திரையில் வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை ஷஃப்னா நிஜாம் தனது நீண்ட நாள் காதலரான சஜின் டிபி என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.இவர் சோசியல்  முடியவில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்  அடிக்கடி  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடன்  கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.