பிக் பாஸ்: மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட “நடிகை விசித்ராவுக்கு இத்தனை பிள்ளைகளா”…!! முழு குடும்ப புகைப்படம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017 முதல் தொடங்கப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

bigg boss tamil | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan

   

இந்நிலையில் தற்போது 7-வது சீசன் தொடங்கப்பட்ட நிலையில், இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த 18 போட்டியாளர்களில் நடிகை விசித்ராவும் ஒருவர். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவரான இவர், முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் போட்டியாளராக உள்ளார்.

தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஷாஜி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன. இவரின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ,