‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’… ரசிகர்களை கவரும் மாடர்ன் உடையில் வந்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்… டிரஸ்ஸ பாத்தீங்கன்னா சும்மா அசந்து போயிடுவீங்க…

முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து, இருவீட்டர் சம்மதத்துடன் 2007ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யாபச்சன் என்று மகள் உள்ளார். இவர் உலக அளவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவர். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

   

இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடைந்தது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் முன்னணி ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

இப்படம் மாபெரும் அளவில் வெற்றியையம் பெற்றது. நல்ல விமர்சனத்தையும், வசூலில் சாதனையும் புரிந்து வருகிறது. தற்பொழுது 2023 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட  விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பல்வேறு திரைபிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் படு மாடலான உடை ஒன்றை அணிந்துள்ளார். தற்பொழுது இவரின் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.