அதிரடியாக ஆரம்பமாகும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 4… குக் ஆக களமிறங்கும் சிவாங்கி… இந்த ட்விஸ்ட்ட நாங்க எதிர்பாக்கலையே… வைரலாகும் லிஸ்ட் இதோ…

குக் வித் கோமாளி சீசன் 4ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’.  இந்த ஷோவின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே ஆகும். கொரோனா லாக் டவுன்  சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது.

   

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளராக வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசன் வெற்றியாளராக கனியும், மூன்றாவது சீசன் வெற்றியாளராக ஸ்ருதிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்பொழுது 4 சீசன் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருப்பதாக விஜய் தொலைக்காட்சி ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்த சீசனில் சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து ஆகியோர் கோமாளிகளாக களமிறங்கி உள்ளனர். இந்த ப்ரோமோவில் சிவாங்கி இடம் பெறவில்லை என்பதால் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று ரசிகர்கள் கருதி வந்த நிலையில், தற்போது திடீர் ட்விஸ்டாக அவர் இந்த சீசனில் சிவாங்கி குக்காக களமிறங்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவரை தொடர்ந்து இந்த சீசனில் குக்காக வலிமை திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பாவும்,  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ஷெரினும், ரஜினியுடன் முத்து திரைப்படத்தில் நடித்த நடிகை விசித்ராவும், நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர், சீரியல் நடிகரான விஜே விஷால் போன்றோர் களமிறங்க உள்ளனர். தற்பொழுது இந்த சீசனை எதிர்பார்த்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.