திருமணத்திற்கு பிறகும்… கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை ஹன்சிகா… கண்ணை கவரும் ஹாட் புகைப்படங்கள் இதோ….

நடிகை ஹன்சிகாவின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்  நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் திரை உலகில் ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகையாக மாறினார்.

   

தனது கொழுக் முழுக் அழகினால் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஹன்சிகா, தனது  ரசிகர்களால் அன்போடு சின்ன குஷ்பூ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து உடல் எடை கூடிய ஹன்சிகாவிற்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது. எனவே தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு  மாறினார் நடிகை ஹன்சிகா. கடந்த ஆண்டு  இவர் தொழில் அதிபர் சோஹைல் கத்தோரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டு கால பழமை வாய்ந்த அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் நடிகை ஹன்சிகா தற்பொழுது சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக இவர் தற்பொழுது கவர்ச்சிகரமான போட்டோ சூட் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவு செய்து இருக்கிறார்.  அந்த வகையில் தற்பொழுது நடிகை ஹன்சிகா நீல நிற கவுனில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.