
கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்டவர். கிரிக்கெட் என்றாலே சச்சின் என்று கூறும் அளவிற்கு பேட்டிங்கில் பல சாதனைகள் செய்திருக்கிறார். மேலும், பல இக்கட்டான சூழ்நிலைகளில், தன் அபார ஆட்டத்தால் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றவர்.
கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த அவர், சமீபத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதில், அவர் கிரிக்கெட் மட்டையை பூஜை அறையில் வைத்து பூஜை செய்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், அவர் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் அளவுகடந்த மரியாதையை பாராட்டி வருகிறார்கள்.