
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின். இவர் தனது குடும்பத்துடன் ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்து வந்தவர் அஸ்வின். சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
ஐபிஎல் போட்டியை பொருத்தவரை இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தார்.
அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணியில் இருந்தார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
பந்து வீச்சு மட்டும் இல்லாமல் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் இருந்து வருகிறார் அஸ்வின். இவர் தன்னுடைய நீண்ட நாள் தோழியான ப்ரீத்தி நாராயணன் என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு அகிரா மற்றும் ஆத்யா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அஸ்வின் தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார், சிறு வயதில் இருந்து இவருக்கு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் மிகவும் போராடி இந்திய அணியில் தேர்வானார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அஸ்வின் மற்றும் அவரது மனைவி அவ்வப்போது வெளியில் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது குடும்பமாக ட்ரிப் சென்றுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram