
இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரின் ஏலம் நடந்து முடிந்தது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக டோனியை ஏலத்தில் எடுத்த வரலாற்று கதை குறித்து பார்ப்போம். கடந்த 2008 ஆம் வருடத்தில் தான் முதன் முதலில் எம்.எஸ். தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது.
அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் டெண்டுல்கரையும், கல்கத்தா அணி சவுரவ் கங்குலியையும், பெங்களூர் அணி ராகுல் டிராவிட்டையும் ஏலத்தில் எடுத்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் யாரை எடுப்பது? என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தது. ஷேவாக் தான் அப்போது திறமை மிகுந்த வீரராக இருந்தார்.
அவரையே எடுத்துவிடலாம் என்று முடிவெடுத்த சமயத்தில் விபி சந்திரசேகர் என்பவர், கடந்த 2007-ல் டி20 உலக கோப்பையை ஜெயித்துக் கொடுத்த எம் எஸ் தோனியின் முகத்தில் ஏதோ தேஜஸ் தெரிகிறது. அவரால் வெல்ல முடியும் என்று அவரை ஏலத்தில் எடுக்க முடிவெடுத்தார். அதற்கும் போட்டி போட்டுக் கொண்டு அனைத்து அணியினரும் ஏலத்தை அதிகரித்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி, சச்சினை வாங்கியது போதாது என்று, டோனியை வாங்குவதற்கு 1.3 மில்லியன் வரை வந்துவிட்டனர். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 மில்லியன் டாலர்கள் என்று கூறி டோனியை வாங்கிவிட்டது. முதல் முறையாக ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டவர் எம் எஸ் தோனி தான். அதன்பிறகு, சிஎஸ்கே அணியின் வெற்றி வரலாறு பற்றி நாம் கூற வேண்டியதில்லை.