
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கவி. இவர் 90 காலகட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை,ரசிகன், விஷ்ணு, நிலாவே வா உள்ளிட்ட பல படங்கள் ஜோடியாக நடித்திருக்கிறார். அப்போது இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது வந்தது. இதன்பின் பல படங்களின் நடித்து வந்த சங்கவி 36 வயதையும் தாண்டி திருமணம் செய்யவில்லை .அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வெங்கடேசன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
அப்போது இவருக்கு வயது 38 . 2020 இல் பெண் குழந்தை ஒன்று ஒரு பிறந்தது .தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் போது இவர் 10 கோடிசொத்தை சேமித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.