நடிகை வனிதாவுடன் இருக்கும் இவர் யார் தெரியுமா?… வைரலாகும் புகைப்படம்… நீங்களே பாருங்க…

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் என்றே கூறலாம். குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார்.

   

இதையெல்லாம் கடந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் சூப்பர் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் கை தேர்ந்தவரான நடிகை வனிதா குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஆனார்.

இதைத் தொடர்ந்து அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி  அதில் சமையல், மேக் டிப்ஸ் குறித்த விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். இதற்கிடையில் யூடியூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் கைக்கொடுக்காததால் தற்போது 2 மகள்களுடன் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார்.

தற்பொழுது நடிகை வனிதா பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நடிகை வனிதாவும், நடிகர் பவர் ஸ்டாரும் திருமணம் முடித்தது போன்ற புகைப்படங்களும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

ஆனால் இப்புகைப்படங்கள் ‘பிக் அப் ட்ராப்’ திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்று இருவரும் விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் நடிகை வனிதா மீண்டும் நடிகர் பவர் ஸ்டாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இப்புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இவர் தான் நடிகை வனிதாவின் அடுத்த ஜோடியா? அடுத்து திருமணம் தானா?’ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது உண்மைதானா அல்லது இப்புகைப்படங்களும் ஏதாவது படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.