எனக்கா ரெட் கார்ட்… கமலை பங்கம் பண்ணும் பிரதீப் இணையத்தில் குவியும் லைக்குகள்… வைரலாகும் புகைப்படங்கள்…

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 ஆனது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் புதுப்புது திருப்பங்களாக அமைந்த சீசனாக  இந்த சீசன் பார்க்கப்படுகிறது. இதில்   போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்  பிரதீப் ஆண்டனி.

   

அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல போட்டியாளர்கள் புகார் சொன்ன நிலையில், கமல் வாக்கெடுப்பு நடந்தி ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை   வெளியேற்றி விட்டார்.   இந்நிலையில் கமல்ஹாசன் கொடுத்தனுப்பிய ரெட் கார்டை கொண்டு பிரதீப் ஆண்டனி நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில வைரலாகி இருக்கிறது. கமல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு பதிலடியாக தான் பிரதீப் இப்படி செய்கிறாரோ என நெட்டிசன்கள் தங்கள் கருத்தை தெருவித்து  வருகின்றனர்.