தனது காதலரை கரம் பிடித்த அமலா பால்….வைரலாகும் புகைப்படங்கள்…

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஜான் மாக்சு தயாரிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மைனா’. இப்படத்தில் விதார்த்,  அமலா பால்,  சேது,  தம்பி,  ராமையா, சுசான் சார்ஜ் , செவ்வாழை, மண்ரோடு மாணிக்கம்  போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.

   

இப்படத்தில் கதாநாயகியாக மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலாபால்.அதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படமானது இவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கவில்லை.

‘மைனா’ திரைப்படத்தின் மூலமாக இவரின்  திரை பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து.அதை  தொடர்ந்து  தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை அமலா பால் தமிழில் உருவாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் கதையில் கியாரா அத்வானி நடித்த கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில்  நடிகை அமலா பால் தனது  நீட நாள் காதலரான ஜகத் தேசாய் திருமணம் செய்துள்ளார்.

தற்போது அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், இரண்டு ஆத்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகமான பெண்ணுடன் கைகோர்த்து இந்த வாழ்நாள் முழுவதும் நடக்கப்போகிறேன் என tag செய்து புகைபடங்களை வெளிட்டுள்ளார் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.