
எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இது பெண்களை மையப்படுத்திய கதையாக உருவாக்கப்பட்டு, பெண்களை அடிமைபடுத்தும் ஆண்களுக்கு மத்தியில் தன் சொந்த காலில் நிற்க போராடும் பெண்களை பற்றிய கதையாக இருக்கிறது.
தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடரில் பெரிய அதிர்ச்சியாய் மாரிமுத்து மரணம் இருந்து, எல்லோருக்கும் பெரும் துக்கத்தை கொடுத்தது.
ஆதிகுணசேகரன் கேரக்டரில்
இந்த சீரியலில் வில்லனாக நடித்த நடிகர் மாரிமுத்து, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பின் இந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஆதிகுணசேகரன் கேரக்டரில், பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி களமிறங்கி உள்ளார். எனவே அவர் முதல் முறையாக ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த, இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஜனனி ஆதிகுணசேகரனை எப்படி திட்டி தீர்க்காருனு நீங்களே பாருங்க.. வீடியோ இதோ,