
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெறுபவர்களுக்கு பல சிறப்பு மிக்க சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது பாரத ரத்னா விருதானது வருடத்தில் மூன்று நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அவ்வாறு பாரத ரத்னா விருது பெறுபவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பரிசு தொகைக்கான வரிப்பணத்தை கட்ட வேண்டிய தேவை இல்லை.
Air india விமானத்தின் முதல் வகுப்பிலும், இந்திய ரயில்வேயின் முதல் வகுப்பிலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கலாம். மேலும், பாராளுமன்றத்தில் அவர்களால் பங்கேற்க முடியும். மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், அரசாங்கத்தால் z கிரேட் பாதுகாப்பு வழங்கப்படும்.
மேலும் அவர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்றால் அம்மாநிலத்தின் அரசாங்கத்தால் சிறப்பு மரியாதை வழங்கப்படும். மேலும், அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால், அந்நாட்டின் இந்திய தூதரகமே அதற்காகவும் மொத்த ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்ளும்.