தல பேருடன் ஹீரோவாக களமிறங்கும் விஜய் டிவி புகழ் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும்  ரியலிட்டி ஷோக்களுக் என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவி ஒளிபரப்பான’ சிரிப்புடா’ என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் தான் நகைச்சுவை நடிகர் புகழ். அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது நகைச்சுவை மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

   

இதை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது.கைதி,சபாபதி, வாய்மை, யானை உள்ளிட்ட படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த புகழ் ‘ஆகஸ்ட் 16 1947’ என்ற படத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருந்தார்.நடிகர்  புகழ்  ‘மிஸ்டர் zoo கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து புது அவதாரம்  எடுத்துள்ளார்.மீண்டும்  புகழ் ‘டைமண்ட் தோனி’ என்ற படத்தில்  ஹீரோவாக நடிக்க உள்ளர்.

இந்த படத்தை இயக்குனர் ஜோஜின் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தை டைமண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. அபிஷேக் என்பவர் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.