பட்டையை கிளப்பிய கில்லி ரீ ரிலீஸ்… விஜய்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய படக்குழுவினர்… வைரல் போட்டோஸ்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் . இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

   

 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் இம்மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி கில்லி திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள். இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் படம் ரிலீஸ் ஆன போது எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதே அளவுக்கு தற்போதும் வரவேற்பு கொடுத்திருந்தார்கள் விஜய் ரசிகர்கள்.

திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

நேற்று கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் வகையில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் இயக்குனர் தரணி மற்றும் விநியோகிஸ்தர் உள்ளிட்ட பலரும் விஜயை நேரில் சந்தித்தனர்.

கோட் படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று அவர்கள் விஜய்க்கு பெரிய மாலை ஒன்றை அணிவித்து மரியாதை செலுத்தியிருந்தார்கள்.

மேலும் விஜய்யும் அவர்களுக்கு சால்வைப் போர்த்தி மரியாதை செலுத்தியிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.