கோடி கோடியாக குவித்த வசூல் இன்னும் ஒத்த ரூபாய் தரல..!முரண்டு பிடிக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்..

பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல்  செய்தது இப்படமானது கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் கொடைக்கானல் வரும் நண்பர்கள் அங்கிருக்கும் குணா குகையில் தவறி விழும் தனது நண்பனை எப்படி மீட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கிளைமாக்ஸ் சீன் குணா படத்தில் வரும் பாடல் இடம் பிடித்த ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருந்தது.

   

இப்படத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் இல்லாமல் புது நடிகர்களை நடித்திருந்த இந்த படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு பெற்றது.தமிழ் ரசிகர்களை  இப்படத்தை வெகுவாக கொண்டாடினார்கள். பல கோலிவுட் பிரபலங்களும் இப்படத்தை பார்த்து பாராட்டினார்கள். நடிகர் கமலஹாசன் கூட படக்குழுவினர் அழைத்து வாழ்த்து கூறினார்.இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு ஏழு கோடி முதலீடு செய்தேன்.பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 % பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால், இது வரை எனக்கு அவர் பணத்தை சொன்னபடி தரவில்லை. மேலும், படத்தின் தயாரிப்புக்காக கொடுத்த ரூ.7 கோடியை கூட திருப்ப தரவில்லை என முறையை  குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளரான சவுபின் ஷாகீர் ஷார்ட் ஆன்டனி பாபு ஷாகீர் ஆகியோரின் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார்.எர்ணாகுளம் நீதிமன்றம் மூலம் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் தயாரிப்பாளர்கள் சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.